இனி இன்ஸ்டாகிராம் ஐடியை ஈசியாக கண்டுபிடிக்கலாம் - வாட்சப்பில் வந்துள்ள புதிய அப்டேட்
வாட்சப்பில் இன்ஸ்டாகிராமை இணைக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
வாட்சப்
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலி உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கு அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப் தங்களது பயனர்களை கவர தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது பணம் செலுத்துவது, ரீசார்ஜ் செய்வது போன்ற வசதிகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
இன்ஸ்டாகிராம் ஐடி
தற்போது, தங்களது வாட்ஸ் அப் செயலியில் இன்ஸ்டாகிராம் ஐடியை இணைக்கும் புதிய வசதியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. தற்போது சோதனை முறையில் பீட்டா பயனர்களுக்கு இந்த வசதி கிடைக்கும். விரைவில் அனைத்து பயனர்களுக்கு கிடைக்கும்.
தற்பொது வாட்ஸ்அப் கணக்கில் பெயர், புகைப்படம், செல்போன் எண் ஆகியவற்றை மட்டும் காண முடியும். இதனுடன் இனிமேல் இன்ஸ்டாகிராம் ஐடியை பார்க்க முடியும். அடுத்தடுத்த அப்டேட்களில் பேஸ்புக் ஐடியையும் இணைக்க மெட்டா திட்டமிட்டுள்ளது.
தனியுரிமையை கருத்தில் கொண்டு, தற்போது புகைப்படம், ஸ்டேட்டஸ் ஆகியவற்றை யாரெல்லாம் பார்க்க முடியும் என பயனர் தேர்வு செய்வது போல், இன்ஸ்டாகிராம் ஐடியை வாட்ஸ்அப்பில் இணைக்கவும், யாரெல்லாம் பார்க்க முடியும் என தேர்வு செய்யும் வசதியும் உள்ளது.