நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்ய வேண்டும் - சோனியா காந்தி

Sonia Gandhi Sri Lanka
By Nandhini Jul 10, 2022 10:59 AM GMT
Report

இலங்கை பொருளாதாரம்

இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அந்நாட்டில் எரிபொருட்கள் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் தவியாய் தவித்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு

கடந்த சில மாதங்களாக ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று அதிபர் கோத்த பய ராஜபக்ச பதவி விலக கோரி இலங்கையில் மக்கள் மீண்டும் போராட்டத்தை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, இலங்கையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை 7 பிரதேசங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்திருந்தது.

இலங்கை அதிபர் மாளிகை சூறையாடல்

நேற்று கோத்த பய ராஜபக்ஷவின் அதிபர் மாளிகையில் பாதுகாப்பிற்காக இருந்த வீரர்கள் பணியிலிருந்து விலனர். இதனையடுத்து போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகை கொள்ளும் ஆவேசமாக பிரவேசித்து அதிபர் மாளிகையை அடித்து நொறுக்கி தீ வைத்து கொளுத்தினர். இதற்கு முன்பாக அதிபர் கோத்த பய ராஜபக்சே கப்பல் மூலம் தப்பி சென்றுவிட்டார்.

சோனியா காந்தி வேண்டுகோள்

இது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி தெரிவிக்கையில், இலங்கை அரசியல் சூழலை கவலையுடன் காங்கிரஸ் கட்சி கவனித்து வருகிறது. சூழ்நிலையை கையாளுவதில் இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவி செய்யும் என நம்புகிறேன். இலங்கைக்கு அனைத்து உதவிகளையும், ஆதரவையும் சர்வதேச சமூகம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Sonia-Gandhi

இலங்கை அதிபர் மாளிகை பதுங்கு குழியில் கட்டு கட்டாக பணம்! பரபரப்பு வீடியோ!