தேர்தலில் இருந்து விலகும் சோனியா காந்தி? பாரம்பரிய தொகுதி இனி பிரியங்கா காந்தியிடம்!

Indian National Congress Sonia Gandhi Priyanka Gandhi
By Sumathi Feb 14, 2024 09:00 AM GMT
Report

  மக்களவை தேர்தலில் இருந்து சோனியா காந்தி ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சோனியா காந்தி

உத்திரபிரதேசத்தில் கடந்த மக்களவை தேர்தலில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் கட்சியில் அனைத்து வேட்பாளர்களும் படுத்தோல்வியை சந்தித்தனர். அங்குள்ள ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி மட்டுமே வெற்றி பெற்றிருந்தார்.

sonia gandhi with priyanka gandhi

தொடர்ந்து நான்கு முறை (2004,2009,2014,2019) வெற்றிமாலை சூடி 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்த தொகுதியில் எம்.பியாக உள்ளார். தற்போது, நடப்பாண்டின் மக்களவை தேர்தலில் உடல் நலகுறைவு காரணமால் அவர் போட்டியிடப்போவதில்லை எனவும்,

சோனியா காந்தி குறித்து பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான உண்மைகள்!

சோனியா காந்தி குறித்து பலரும் அறிந்திடாத சுவாரஸ்யமான உண்மைகள்!

எம்பி பதவி

ரேபரேலி தொகுதி இப்போது பிரியங்கா காந்தியிடம் ஒப்படைக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே, ஏப்ரல் 2 மற்றும் ஏப்ரல் 3 ஆம் தேதிகளில் 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவுக்கு வரவுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் செய்ய வரும் 15ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் இருந்து விலகும் சோனியா காந்தி? பாரம்பரிய தொகுதி இனி பிரியங்கா காந்தியிடம்! | Sonia Gandhi Nomination For The Rajya Sabha Seat

இந்நிலையில், ராஜஸ்தானில் மாநிலங்களவை எம்.பியாக சோனியாகாந்தி முடிவு செய்துள்ளார். இதற்காக ஜெய்ப்பூரில் மனுத்தாக்கல் செய்யவுள்ளார். 3 மாநிலங்களவை எம்பி பதவிகள் காலியாக உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எம்பி சீட் கிடைப்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.