ராஜீவ் காந்தி - சோனியா காந்தி: நம்பிக்கை நட்சத்திரமான அகமது படேலின் அரசியல் வரலாறு
அகமது படேல் இந்திய தேசிய காங்கிரஸின் உறுப்பினராக மூத்த பதவியை வகித்தவர்.
பிறப்பு
1949ல் குஜராத்தின் பிரமன் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை முகமது இஷாக்ஜி படேல் மற்றும் தாய் ஹவாபென் முகமதுபாய். பி.எஸ்சி முடித்தார். 1976 இல் மெமூனா அகமது படேலை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இசை, வாசிப்பு, தோட்டக்கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் மிகவும் ஆர்வமுடையவர்.
1976 இல் குஜராத்தின் பருச் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1977ல் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியால் 6வது மக்களவைக்குத் தேர்தலில் பரூச்சில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டு தேர்தல்களில் வெற்றி பெற்றார். மேலும் 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றார்.
அரசியல் ஆர்வம்
1985 இல், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியின் நாடாளுமன்ற செயலாளராக ஆனார். 1987 இல், அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, சர்தார் சரோவர் திட்டத்தைக் கண்காணிக்க நர்மதா மேலாண்மை ஆணையத்தை அமைக்க உதவியாக இருந்தார். 1988 ஆம் ஆண்டு ஜவஹர் பவன் அறக்கட்டளையின் செயலாளராக நியமிக்கப்பட்ட இவர், நேருவின் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி ஜவஹர் பவனைக் கட்டி முடித்த பெருமைக்குரியவரானார்.
2005 ஆம் ஆண்டில், அகமது படேல் தனது நான்காவது முறையாக ராஜ்யசபாவில் சேர்க்கப்பட்டார். 2004 மற்றும் 2014 க்கு இடையில் 14 மற்றும் 15 வது மக்களவையில் UPA அரசாங்கத்திலிருந்து விலகி இருக்கத் தேர்ந்தெடுத்தார். எஹ்சான் ஜாஃப்ரிக்குப் பிறகு குஜராத்தில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டாவது முஸ்லீம் இவர்தான். 2017இல் மாநிலங்களை அவைக்கு தேர்வானார்.
குஜராத்தில் காங்கிரஸ் கொடி
காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறியவரின் நெருக்கடியால், வழக்கமாக போட்டியின்றித் தேர்வாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, பல ஆண்டுகளுக்கு குஜராத் சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு நடந்தது. பல ஆண்டுகளாக பாஜகவின் கோட்டையாக இருக்கும் குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று அகமது படேல் மாநிலங்களை அவைக்கு மீண்டும் தேர்வானது அப்போது தேசிய அளவில் பெரிதும் பேசப்பட்டது.
இறப்பு
தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான சோனியா காந்தியின் அரசியல் செயலாளராக பணியாற்றினார். கட்சியின் மூத்த உறுப்பினர் மோதிலால் வோராவுக்குப் பதிலாக 2018 இல் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். 2020ல் உறுப்பு செயலிழப்பு காரணமாக மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் ஐசியுவில் இருந்தார். சிகிச்சை பலனின்றி நவம்பர் 25 அன்று உயிரிழந்தார். அவரது உடல் குஜராத்தில் உள்ள அவரது மூதாதையர் கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
பெருமை
2005 ஆம் ஆண்டில், மாவட்டத்தில் மின்மயமாக்கலை அதிகரிக்க, அப்போது தொடங்கப்பட்ட ராஜீவ் காந்தி கிராமின் வித்யுதிகரன் யோஜனா திட்டத்தின் கீழ் முதல் ஐந்து மாவட்டங்களில் ஒன்றாக பருச் சேர்க்கப்பட்டது. இரட்டை நகரங்களான பருச் மற்றும் அங்கலேஷ்வர் இடையே போக்குவரத்து நெரிசலைக் குறைக்க சர்தார் படேல் பாலமும் இப்பகுதிக்கு அவரது பங்களிப்புகளில் ஒன்றாகும்.
சர்தார் படேல் மருத்துவமனை & ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டை அங்கிலேஷ்வரில் நிறுவியதும் அவரது முயற்சிகளுக்குப் பெருமை சேர்த்துள்ளது. ராஜீவ் காந்தி உயிருடன் இருந்தபோது அவருக்கு எவ்வளவு நம்பிக்கைக்குரியவராக இருந்தாரோ அதே அளவு நம்பிக்கைக்குரியவராக சோனியா காந்திக்கும் அவர் இருந்ததாகவே பார்க்கப்பட்டார்.
இறக்கும்போது காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக பதவி வகித்த அகமது படேல் சோனியா காந்திக்கு அரசியல் ஆலோசகராக இருந்த போது கட்சியில் மிகவும் சக்தி வாய்ந்தவராக விளங்கினார்.