எஸ்பிபி சரணுக்கும், சோனியா அகர்வாலுக்கும் திருமணமா? - போஸ்ட் போட்டு உண்மையை கூறிய சரண்

Sonia Agarwal Marriage
6 நாட்கள் முன்

சோனியா அகர்வால்

‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் சோனியா அகர்வால். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் பிரபல நடிகையாக வலம் வந்தார்.

இதன் பின்னர், ‘7G ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘கோவில்’ உள்ளிட்ட படங்களில் தன்னுடைய நடிப்புத் திறமையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

திருமணம்

சினிமாத்துறையில் குறுகிய காலத்திலேயே அவர் இயக்குநர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன்பிறகு தனிமையில் இருந்த சோனியா தற்போது சில திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

எஸ்.பி.பி.சரண் - சோனியா அகர்வால் புகைப்படம்

இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் எஸ்.பி.பி.சரண் மற்றும் சோனியா அகர்வால் இணைந்துள்ளனர். அதோ, இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

இதனையடுத்து, ரசிகர்கள் இரு பிரபலங்களின் டைம்லைன்களிலும் வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். புகைப்படத்தைப் பார்த்த ஒரு சிலரோ, இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கான விளம்பரமாக கூட இருக்கலாம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

எஸ்பிபி சரணுக்கும், சோனியா அகர்வாலுக்கும் திருமணமா? - போஸ்ட் போட்டு உண்மையை கூறிய சரண் | Sonia Agarwal S P B Charan

உண்மையை கூறிய சரண்

இதனையடுத்து, புதிய போஸ்டர் ஒன்றை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார் எஸ்பிபி சரண். அந்த போஸ்டரில் சோனியா அகர்வால், எஸ்பிபி சரண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் இருக்கின்றனர். அதில் வெப் சீரிஸ் என்கிற ஹேஷ் டேக்கும், பிலிம் புரடக்ஷன் என்றும் பதிவிட்டிருக்கிறார். போட்டோஸ் வெப் சீரிஸ் விளம்பரம் என்பது உறுதி செய்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் எஸ்பிபி சரண். 

எஸ்பிபி சரணுக்கும், சோனியா அகர்வாலுக்கும் திருமணமா? - போஸ்ட் போட்டு உண்மையை கூறிய சரண் | Sonia Agarwal S P B Charan

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.