அந்த விஷயத்தில் அவருக்கு ரொம்ப ஈடுபாடு அதிகம்... - செல்வராகவனைப் பற்றி மனம் திறந்த சோனியா அகர்வால்
‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் ‘சோனியா அகர்வால்’. இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததால் பிரபல நடிகையாக வலம் வந்தார்.
இதன் பின்னர், ‘7G ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’, ‘கோவில்’ உள்ளிட்ட படங்களில் தன்னுடைய நடிப்புத் திறமையால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். சினிமாத்துறையில் குறுகிய காலத்திலேயே அவர் இயக்குநர் செல்வராகவனை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இந்நிலையில், தற்போது சோனியா அகர்வால் இயக்குநர் செல்வராகவனை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், செல்வராகவன் கடினமாக உழைப்பாளி. எப்போதும் வேலை மீது கவனம் செலுத்தி வருவார். அதுதான் அவரிடம் எனக்கு பிடித்த விஷயமே. நட்புடன் பழகியபோது எங்கள் இருவருக்குள்ளும் காதல் வந்தது.
எனவே இருவரும் திருமணம் செய்துகொண்டோம். திருமணம் ஆனபோது எனக்கு அவ்வளவு சந்தேகம் இருந்தது. ஆனால், அந்த சந்தோஷம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கவில்லை.
சில காரணங்களால் நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம் என்று உருக்கமாக பேசியுள்ளார்.