7 வருட காதல் - மாற்று மதத்தில் திருமணம் செய்து கொண்ட லிங்கா நாயகி!!
சோனாக்ஷி சின்ஹா
ஹிந்தி திரையுலகில் முன்னணி நாயகியாக வளம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. தமிழில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "லிங்கா" படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய திரையில் பிரபலமடைந்தவர் சோனாக்ஷி சின்ஹா.
ஆனால், இப்படம் நடிப்பதற்கு முன்பே அவர் ஹிந்தியில் முன்னணி கதாநாயகி. பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகளான இவர், 2010 ஆம் ஆண்டு சல்மான் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டடித்த "தபாங்" படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
அப்படத்தை தொடர்ந்து பாலிவுட் முன்னணி நாயகர்களான அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், ஷாஹித் கபூர் என அநேக நாயகர்களுடன் நடித்துவிட்டார். 37 வயதாகும் இவர், கடந்த 7 ஆண்டுகளாக ஜாஹீர் இஃபால் என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவரும் பாலிவுட் நடிகராவார். இவர்களின் காதல் ரகசியமாக இருந்த நிலையில், பெற்றோரின் சம்மதத்துடன் தற்போது தனது காதலனை கரம் பிடித்துள்ளார் சோனாக்ஷி சின்ஹா.
நேற்று நடைபெற்ற இவரது திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில், பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர் மட்டுமே பங்கெடுத்திருக்கிறார்கள்.