பெற்ற மகனே தாயை கொன்ற கொடூரம்; ஊதுபத்தி ஏற்றி 4 நாள் சடலத்துடன்.. பகீர் தகவல்!
பெற்ற மகனே தாய்க் கொன்று ஊதுபத்தி ஏற்றி 4 நாள் சடலத்துடன் வாழ்ந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ராம் மிலன் - ஆர்த்தி தேவி தம்பதியினர். இவர்களுக்கு மகளும், மகனும் உள்ளனர். மூத்த மகள் கல்லூரியில் தங்கி எம்பிபிஎஸ் படித்து வருகிறார். தந்தையும் வெளிமாநிலத்தில் வேலைச் செய்து வருகிறார். இந்த சுழலில் தனது 17 வயது மகன் அமன் உடன் ஆர்த்தி தேவி தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் ,கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி செல்ல தாமதமானதால் தூங்கிக்கொண்டிருந்த தனது மகனை எழுப்பியுள்ளார்.அப்போது ஆத்திரத்தில் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த தாய் ஆர்த்தி தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தால் செய்வது அறியாமல் திகைத்த மகன் அமன் தாயின் உயிரிழப்பை மறைக்க முயன்றுள்ளார். இதனை தொடர்ந்து வீட்டை வெளியிலிருந்து பூட்டிவிட்டு தாயின் சடலத்துடன் 4 நாட்கள் உள்ளேயே இருந்துள்ளார். மேலும் ஆர்த்தி தேவியின் உடல் அழுகி துர்நாற்றம் வரத் தொடங்கியது.
இதனால் ஊதுபத்திகளை ஏற்றி அந்த வாடை வெளியே செல்லாமல் அமன் தடுத்துள்ளார் இந்த நிலையில் ,தந்தை ராம் மிலன் பலமுறை அழைத்தும் ஆர்த்தி தேவி செல்போன் ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது.
ஊதுபத்தி
இதனால் சந்தேகம் அடைந்த ராம் மிலன் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது அவரது மனைவியின் உடல் ரத்த வெள்ளத்தில் அழுகிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அமன் முன்னுக்கு முரனாகப் பதில் அளித்தார். தொடர்ந்து அமனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தாய் பள்ளிக்குச் செல்லுமாறு கூறியுள்ளார்.
இதற்கு அமன் மறுத்துள்ளார். மேலும் அமன் அதிகப் பணத்தை வாங்கி செலவழிப்பதாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரத்தில் கீழே தள்ளிவிட்டுக் கொன்றதாக வாக்கு மூலம் அளித்தார்.