கறிக்குழம்புக்காக தந்தையை வெட்டிய மகன் - அதிர்ச்சி சம்பவம்!
கும்பகோணத்தில் இளைஞன் ஒருவர் தனது உணவை அவரது தந்தை சாப்பிட்டதற்காக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம்
தஞ்சாவூர் மாவட்டம், விசலூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ்.
இவருக்கு ராமச்சந்திரன் என்ற மகன் இருக்கிறார். இருவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே ராமச்சந்திரனுக்கான அசைவ உணவு வைக்கப்பட்டுள்ளது. அதனை அவரது தந்தை சாப்பிட்டு விட்டதாக கூறப்படுகிறது.
மகன் செய்த காரியம்
இதனை தொடர்ந்து, ஆத்திரமடைந்த மகன், கதிர் அறுக்கும் அரிவாளை வைத்து அவரது தந்தையின் முதுகில் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயம் அடைந்த மோகன்தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தலைமறைவான மகனை போலீசார் தேடி வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.