எனக்கு ஏன் இன்னும் கல்யாணம் பண்ணி வைக்கல...அப்பாவை'யே ஸ்கெட்ச் போட்டு தூக்கிய மகன்...!
திருமணம் செய்து வைக்காத விரக்தியில் மகனே தந்தையை கொன்ற சம்பவம் பட்டுக்கோட்டையில் அரங்கேறியுள்ளது.
விரக்தி
தஞ்சாவூர் பட்டுக்கோட்டையை அடுத்த தாமரங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 55 வயதான சுப்பிரமணி. வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்த இவரது மகன் மணிமாறன் துபாயில் வேலை கிடைக்கவே அங்கு சென்றுள்ளார்.
பெரிய சம்பளத்தில் வேலை கிடைக்கவில்லை என்பதால் 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். திருமண ஆகாத விரக்தியில் இருந்த அவர் தனது திருமணம் குறித்து தந்தையுடன் அடிக்கடி விவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஆனால், நல்ல வேலை இல்லை, சம்பாதிக்கவில்லை என்ற காரணங்களை தந்தை சுப்பிரமணி கூறியதால் ஆத்திரம் அடைந்த மணிமாறன் கொலைவெறியுடன் தந்தையை தாக்கியுள்ளார்.
மேலும், அரிவாளை எடுத்து தந்தை என்றும் பாராமல் தலையில் மணிமாறன் வெட்ட, சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அதிராம்பட்டினம் போலீசார் கொலை செய்த மணிமாறனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.