சித்தினு கூட பார்க்கல.. முதல் மனைவியின் 2வது மகன் வெறிச்செயல் - கொடூர சம்பவம்!
சொத்து தகராறில் மகன், சித்தியை கொன்று வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சொத்து தகராறு
விழுப்புரம், துறிஞ்சிப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவர் இறந்துவிட்ட நிலையில், இவருக்கு இரண்டு மனைவியர். முதல் மனைவி விருத்தாம்பாள்(50).
பாலகுரு (28), பிரகாஷ் ராஜ் (25) என்ற 2 மகன்களும், 2வது மனைவி ஜெயக்கொடிக்கு பூபாலன்(19) என்ற மகனும், 17 வயதில் மகளும் உள்ளனர்.
இந்நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஜெயக்கொடியை மர்ம நபர்கள் தலையில் பலமாக அடித்து கொலை செய்து இழுத்துச் சென்றுள்ளனர். உடலை கல்லை கட்டி அருகில் இருந்த கிணற்றில் தூக்கி வீசி சென்றுள்ளனர்.
மகன் வெறிச்செயல்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் ஜெயக்கொடிக்கும், முதல்மனைவியின் 2வது மகன் பிரகாஷ்ராஜூக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது தெரியவந்தது.
சித்தி ஜெயக்கொடியை கொலை செய்ததை பிரகாஷ்ராஜ் ஒப்புக் கொண்டார். அப்பா பழனிவேல் பெயரிலிருந்த நிலத்தை பிரகாஷ்ராஜ் பங்கு பிரித்து கேட்டதற்கு, ஜெயக்கொடி மறுத்ததால், கொலை செய்துள்ளார். இதையடுத்து பிரகாஷ்ராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.