விபத்தில் மகன் காயம்: தந்தைக்கு அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள்
இந்தியாவின் ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த மகனுக்கு பதிலாக தந்தைக்கு அறுவைசிகிச்சை மேற்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தானின் கோட்டா அரசு மருத்துவமனை
ராஜஸ்தானின் கோட்டா அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலேயே இந்த அவலம் நடந்துள்ளது. விபத்தில் காயமடைந்த மனீஷ் என்பவருக்கு காலில் அறுவைசிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
இதன்போது தனக்கு உதவிக்கு ஆள் தேவைப்படும் என்பதால் தந்தை ஜெகதீஸை உடன் அழைத்து சென்றுள்ளார். சனிக்கிழமை மனீஷை அறுவைசிகிச்சைக்கு அரங்குங்குள் அழைத்து சென்ற நிலையில், ஜெகதீஷ் வெளியே அமர்ந்து கொண்டிருந்தார்.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் ஜெகதீஷால் சரியாக பேச முடியாது, இவர் தான் நோயாளி என கருதிய ஊழியர்கள் ஜெகதீஷை அழைத்து சென்று கையில் அறுவைசிகிச்சை செய்வதற்கான பணிகளை செய்துள்ளனர்.
ஜெகதீஷ் சொல்ல முயன்றும் அவரால் பேச முடியவில்லை, உடனடியாக அரங்குங்குள் வந்த மருத்துவர் இவர் நோயாளி இல்லை என கூறியதும் அறுவைசிகிச்சை நிறுத்தப்பட்டு கையில் 6 தையல்கள் போட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பிய நிலையில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு கோட்டா அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.