மருமகனுக்கு 100 வகையான உணவு - கவனிப்பில் சிலிர்க்க வைத்த மாமியார்!
புதுமாப்பிள்ளைக்கு 100 வகை உணவு வகைகளைப் பறிமாறிய மாமியாரின் உபசரிப்பு கவனம் பெற்றுள்ளது.
100 வகை உணவு
ஆந்திரா, காக்கிநாடாவைச் சேர்ந்தவர் ரவி தேஜா. இவருக்கும் ரத்னகுமாரி என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், ஆஷாட (ஆடி) மாதத்தையொட்டி தனது மனைவியை பிரிந்திருந்த ரவி தேஜா, மீண்டும் தனது மனைவியை அழைத்துச் செல்ல அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அசத்திய மாமியார்
இதனையொட்டி அவரது மாமியார் 100 வகையான உணவுகளை பரிமாறி மருமகனை திளைக்க வைத்துள்ளார். அதில், சக்லி முதல் மைசூர் பாக் வரை தம்பதிக்கு பரிமாறப்பட்டது.
Andhra Pradesh: In Tamarada village, Kakinada district, a mother-in-law honored her son-in-law Ravi Teja with a lavish feast of 100 dishes to celebrate his first visit after the Ashada month, blending traditional Andhra and modern favorites pic.twitter.com/FMEdD2ixKP
— IANS (@ians_india) August 11, 2024
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக, இதேபோல் ஒரு குடும்பத்தில் 379 வகையான உணவுகளை மாப்பிள்ளைக்கு பரிமாறி மாமியார் குடும்பத்தினர் அசத்தியது குறிப்பிடத்தக்கது.