மருமகனுடன் மாமியார் செய்த காரியம் - மீட்டுத் தரக்கோரி மாமனார் பரபரப்பு புகார்!
மருமகனிடம் இருந்து தனது மனைவியை மீட்டுத் தரக்கோரி நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
புகார் மனு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஒருவர் வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் "எனக்கு திருமணமாக மனைவியுடன் மகிழ்ச்சியக வாழ்ந்து வந்தேன்.
இதனிடையே எனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன் .ஆனால், எனது மருமகன் எனது மகளை வீட்டில் விட்டு விட்டு என் மனைவியை அழைத்துச்சென்று ஈரோட்டில் வாழ்ந்து வருகிறார்.
கொலை மிரட்டல்
என்னுடன் சேர்ந்து வாழ எனது மனைவியை அழைத்தால் வர மறுக்கிறார்.அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு மருமகனிடம் கூறினாலும் அனுப்ப மறுக்கிறார். மேலும் என்னை கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்.
இதற்கு மருமகனின் பெற்றோரும் உடந்தையாக உள்ளனர். எனவே மருமகனிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத் தர வேண்டும்" என்று அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.