Monday, Apr 28, 2025

மயக்க தீர்த்தம் கொடுத்து பூசாரி செய்த காரியம் - டிவி தொகுப்பாளினி பரபரப்பு புகார்!

Tamil nadu Chennai Sexual harassment Crime
By Jiyath a year ago
Report

கோவில் பூசாரி ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் தொகுப்பாளினி ஒருவர் புகார் அளித்துள்ளார். 

புகார் மனு 

சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் "என்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறேன்.

மயக்க தீர்த்தம் கொடுத்து பூசாரி செய்த காரியம் - டிவி தொகுப்பாளினி பரபரப்பு புகார்! | Female Anchor Complains Against Temple Poosari

எனக்கு சென்னை பாரிமுனையில் உள்ள அம்மன் கோவில் பூசாரியான கார்த்திக் முனுசாமி என்பவர் பழக்கமானார். இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், அவரது வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார். பின்னர் தீர்த்தம் எனக்கூறி திரவம் ஒன்றை கலந்து கொடுத்தார்.

தட்டிக்கேட்ட கணவனை கட்டிப்போட்டு ஆணுறுப்பில் சிகரெட் சூடு - மனைவி வெறிச்செயல்!

தட்டிக்கேட்ட கணவனை கட்டிப்போட்டு ஆணுறுப்பில் சிகரெட் சூடு - மனைவி வெறிச்செயல்!

விசாரணை 

அதனை குடித்த சில நிமிடங்களில் நான் மயங்கிய நிலையில் என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். பின்னர் ஆசைவார்த்தை கூறி அம்மன் கோவிலில் தாலி கட்டி என்னை திருமணம் செய்து கொண்டார்.

மயக்க தீர்த்தம் கொடுத்து பூசாரி செய்த காரியம் - டிவி தொகுப்பாளினி பரபரப்பு புகார்! | Female Anchor Complains Against Temple Poosari

இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தனது கருவை கலைத்து விட்டதாகவும், பிறகு பாலியல் தொழிலில் தன்னை தள்ள முயன்றதாகவும் அந்த பெண் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.