அத்தையைத் திருமணம் செய்து கொண்ட மருமகன் - கதறிய மாமா!
மருமகன், அத்தையை திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருமகன் - அத்தை
உத்தரப் பிரதேசம், ராம்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் நூர்பால். இவரது மனைவி லீலா(40). இந்தத் தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், லீலாவிற்கு தனது மைத்துனரின் மகனான மருமகன் பிரம்மா ஸ்வரூப் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஸ்வரூப், தனது அத்தை லீலாவைவிட ஐந்து வயது சிறியவர். இருவருக்கும் இடையேயான பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.
இதுகுறித்து அறிந்த கணவர், லீலாவை அழைத்து விசாரித்துள்ளார். அதில் மருமகன் பிரம்மா ஸ்வரூப்புடன் உறவு வைத்திருப்பதை லீலா ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இருவரும் மூன்று வருடங்களாகவே திருமணத்தை மீறிய உறவில் இருந்ததும் தெரியவந்துள்ளது.
தகாத உறவு
இதற்கிடையில், லீலா தனது மருமகன் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். தொடர்ந்து பிரம்மா ஸ்வரூப்புடன் காவல் நிலையம் வந்த லீலா, "நான் வழக்கைத் தொடர விரும்பவில்லை;
அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார். அத்துடன், தாங்கள் கையில் வைத்திருந்த மாலைகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு, திருமணம் செய்துக்கொண்டனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து பேசிய கணவர் நூர்பால், “நான் வேலைக்காக வெளியே செல்லும்போது, மருமகன் பிரம்மா சுவரேறி குதித்து என் மனைவியைச் சந்திப்பார். இதை நான் பல முறை எச்சரித்திருக்கிறேன். ஆனால், அவர்கள் உறவை தொடர்ந்து வந்துள்ளனர்.
முதலில் எனக்கு இதுகுறித்து தெரியாது. கிராமவாசிகள் மற்றும் அக்கம்பக்கத்தினர் மூலமாக இந்த உறவு எனக்கு தெரியவந்தது” என்று வேதனை தெரிவித்துள்ளார்.