55 வயதில் கள்ளக்காதலா.? மாமியார் மீது டிராக்டர் ஏற்றி கொன்ற மருமகன்!
மாமியாரையும், அவரது ஆண் நன்பரையும் டிராக்டர் ஏற்றி மருமகன் கொலை செய்துள்ளார்.
தகாத உறவு
கடலூர், தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி கொளஞ்சி(55). இவர்களுக்கு குழந்தை இல்லை. ராதாகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். கொளஞ்சியின் தங்கை சித்ராவை பெரம்பலூர் சன்னாசிநல்லூர் பகுதியில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.
அங்கு அவர் இறந்துவிட்டதால் அவரது மகள் சீதாவை தன்னுடன் அழைத்து வந்து அதே கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
கொடூர கொலை
இந்நிலையில் அன்பழகன் உறவினரான செல்லத்துரை என்பவருடன் கொளஞ்சி பழகி வந்துள்ளார். இதைனை அறிந்தவர் மாமியாரை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அதனை மாமியார் கேட்காததால் அவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது டிராக்டரை வைத்து முதலில் கொளஞ்சி மீது ஏற்றிக் கொலை செய்து,
தப்பி ஓடிய செல்லத்துரையை பின்னால் துரத்திச் சென்று டிராக்டர் ஏற்றிக் கொலை செய்துள்ளார்.
தொடர்ந்து, போலீஸார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சரணடைந்தவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.