காதல் மனைவி வாழ தடையா இருந்த மாமியாரை குழவிக்கல்லால் கொடூரமாக கொலை செய்த மருமகன் - அதிர்ச்சி சம்பவம்
கருவேப்பம்பட்டியைச் சேர்ந்தவர் ஆர்த்தி. இவர் கடந்த 3 வருடங்களுக்கு முன் கார்த்தி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார்.
ஆனால், கார்த்திக்கு ஜன்னி வந்துள்ளது. இதைப் பார்த்து பயந்து போன ஆர்த்தி தாய் கோகிலா வீட்டிற்கு சென்றுவிட்டார். தாய் வீட்டிற்கு போன் ஆர்த்தி திரும்பி வரவே இல்லை. கார்த்தி ஆர்த்தியை தொடர்பு கொண்டு பேசியபோதும், ஆர்த்தி வர மறுத்துவிட்டார்.
இதனையடுத்து, மனைவியை பார்க்காத ஏக்கத்தில் கார்த்தி ஒரு மாதத்திற்கு முன் மாமியார் வீட்டின் பின்புறத்திலேயே வாடகைக்கு வீடு எடுத்து குடி வந்துவிட்டார்.
ஆர்த்தியுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்ட கார்த்தி மாமியாரை அணுகினார். ஆனால், அதற்கு மாமியார் தடையாக இருந்து வந்தார். இதனால், கார்த்திக்கும், மாமியாருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று மாலை இது தொடர்பான சண்டையில், ஆத்திரம் அடைந்த கார்த்தி குழவிக்கல்லால் கோகிலாவை தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் தாய் கோகிலா ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம், பக்கத்தினர் கோகிலா உயிரிழந்ததைப் பார்த்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்துள்ளனர்.