இந்த வயசுல கள்ளக்காதல் தேவையா? மாமியாரை தட்டிக்கேட்ட மருமகன் - நேர்ந்த கொடூரம்!
மாமியாரின் தகாத உறவை தட்டிக்கேட்ட மருமகன் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தகாத உறவு
புதுச்சேரி குருசுக்குப்பத்தை சேர்ந்தவர் முகுந்தன்(23). இவர் அதே பகுதியை சேர்ந்த ரம்யா(18) என்ற பெண்ணை காதலித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
அதன்பின், இருவரும் விழுப்புரத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர். வீட்டின் எதிரே முகுந்தனின் மாமியார் கோமதி வசித்து வருகிறார். இந்நிலையில், கோமதிக்கும், குருசுக்குப்பத்தை சேர்ந்த தேவா (23) என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளது.
மருமகன் கொலை
இதனை அறிந்த மருமகன் தேவாவை எச்சரித்துள்ளார். தொடர்ந்து, சம்பவத்தன்று இரவு முகுந்தன் மனைவியுடன் தியேட்டருக்கு சென்றுவிட்டு திரும்பி வருகையில் தேவா மாமியார் வீட்டில் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மருமகன் தகராறில் ஈடுபட்டுள்ளார். உடனே அன்று அதிகாலை தேவா, முகுந்தனின் வீடு புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்த மனைவி ரம்யா மயக்கமடைந்துள்ளார். தொடர்ந்து, தகவலறிந்து வந்த போலீஸார் உடலை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து தேவாவை கைது செய்துள்ளனர்.