காதலியுடன் வீட்டை விட்டு ஓடிய மகன் - பெண் வீட்டாரால் தந்தைக்கு நேர்ந்த கொடுமை!
சேலம் அருகே காதலியுடன் ஓடிச் சென்ற மகனால், இரு வீட்டார் தகராறில் காதலனின் தந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம், செங்கான்வளவு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவருடைய மனைவி சின்னம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இவர்களது 2வது மகன் பிரகாஷ். அதே பகுதியைச் சேர்ந்த சந்தியா என்றை பெண்ணை காதலித்துள்ளார். இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதனால், வீட்டை விட்டு வெளியேறி ஓடிச் சென்றுள்ளனர். இதை அறிந்ததும் ஆத்திரமடைந்த சந்தியாவின் குடும்பத்தினர், தங்கவேலுவின் வீட்டிற்கு சென்று விசாரித்திருக்கிறார்கள்.

அப்போது, இரு தரப்பினருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது. அதில், பிரகாஷின் தந்தை தங்கவேலுவை சந்தியாவின் குடும்பத்தினரால் கத்தியால் குத்தி கொலை செய்தனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
உடனடியாக தங்கவேலுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.
மகனின் காதல் விவகாரத்தில் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.