மயங்கி விழுந்து உயிரைவிட்ட மகன் - உடலை பார்த்து கதறியதில் தாய்க்கு நேர்ந்த சோகம்!

Madurai Death
By Sumathi Aug 13, 2025 05:10 AM GMT
Report

இறந்த மகனின் உடல் மீது தாயும் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகன் இறப்பு

மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் குமரவேல்(51). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருடைய மனைவி ராஜதிலகா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

மயங்கி விழுந்து உயிரைவிட்ட மகன் - உடலை பார்த்து கதறியதில் தாய்க்கு நேர்ந்த சோகம்! | Son Died Mother Cried Died After That Madurai

இந்நிலையில் குமரவேல் வீட்டில் இருந்த நிலையிலேயே திடீரென மயங்கி விழுந்தார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்ததில் குமரவேல் இறந்து விட்டதாக கூறினர். தொடர்ந்து அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு இருந்தது.

15 மாத குழந்தையின் கை, கால்களை திடீரென கடித்த பெண் - கதறிய பெற்றோர்!

15 மாத குழந்தையின் கை, கால்களை திடீரென கடித்த பெண் - கதறிய பெற்றோர்!

சோகத்தில் உயிரைவிட்ட தாய்

அப்போது அவரது தாய் தாயார் கோவிந்தம்மாள் (80). மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். திடீரென தனது மகனின் உடல் மீது மயங்கி விழுந்து உயிரைவிட்டார்.

மயங்கி விழுந்து உயிரைவிட்ட மகன் - உடலை பார்த்து கதறியதில் தாய்க்கு நேர்ந்த சோகம்! | Son Died Mother Cried Died After That Madurai

இதனையடுத்து தாய், மகன் உடல்கள் அருகருகே அஞ்சலிக்காக வைக்கப்பட்டன. பின் 2 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன.