படம் பிடித்தவரை விரட்டிச் சென்று மிதித்த யானை - அதிர்ச்சி வீடியோ

Viral Video Karnataka Elephant
By Sumathi Aug 12, 2025 08:36 AM GMT
Report

காட்டு யானை ஒன்று சுற்றுலாப் பயணியை விரட்டித் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ரோஷமான யானை

கர்நாடகா, பந்திப்பூரில் வனச் சரணாலயம் அமைந்துள்ளது. அங்கு தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றை யானை நின்று கொண்டிருந்தது.

karnataka

சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்தி கூட்டமாக வேடிக்கை பார்த்தனர். சிலர், நெருங்கிச் சென்று செல்போனில் போட்டோ எடுப்பதும், செல்ஃபி எடுப்பதுமாக இருந்தனர். அதில் சுற்றுலாப் பயணி ஒருவர், மிக அருகில் சென்று வீடியோ எடுத்துள்ளார்.

அப்போது, திடீரென ஆக்ரோஷமடைந்த யானை அந்த நபரை துரத்த ஆரம்பித்தது. தொடர்நது ஆவேசமாக துரத்திய யானை, தடுமாறி கீழே விழுந்தவரை மிதித்தது. அருகில் இருந்த சுற்றுலாப் பயணிகள் கூச்சலிட்டதும் மிரண்டு போன யானை அங்கிருந்து வனத்திற்குள் ஓடியது.

ஆசிரியர் கையில் 15,000 ராக்கிகளை கட்டிய மாணவிகள் - யார் அவர்?

ஆசிரியர் கையில் 15,000 ராக்கிகளை கட்டிய மாணவிகள் - யார் அவர்?

அதிர்ச்சி வீடியோ

இதில் அந்த நபர் மிதிபட்டு படுகாயமடைந்தார். படுகாயத்துடன் நூலிழையில் உயிர் தப்பிய சுற்றுலாப் பயணியை, அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது.

இதனையடுத்து, பந்திப்பூர் சரணாலயம் பகுதியில் அத்துமீறும் சுற்றுலாப் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.