தெரு நாய்களை முழுவதும் அகற்றுங்க; இவ்வளவுதான் டைம் - உச்சநீதிமன்றம்
தெரு நாய்களை நாடு முழுவதும் அகற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெரு நாய்கள்
தெருநாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த ஒருவர் தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் நீதிபதிகள் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு,
குறிப்பாக காலை நடைப்பயிற்சி செய்பவர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து உள்ளதாகவும் கவலை தெரிவித்தார். கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் 37 லட்சத்து 17 ஆயிரத்து 336 பேர் தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டதாகவும்,
உச்சநீதிமன்ற உத்தரவு
இதில் குழந்தைகள் மற்றும் முதியோர் அதிகம் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, மூத்த வழக்கறிஞர் கவுரவ் அகர்வால், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வது மட்டும் போதாது,
தெருக்களை தெரு நாய்கள் இல்லாதவாறு மாற்ற வேண்டும். இந்தியாவில் மக்கள் வாழும் பகுதிகள் தெரு நாய் இல்லாத பகுதியாக மாற்ற வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள தெரு நாய் பிரச்சனைகளை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய நிலை உள்ளது. தெருநாய்களை பிடிக்க 8 வாரங்கள் அவகாசம் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.