வயசாகியும் திருமணம் செய்து வைக்காத பெற்றோர் - போலீசில் புகார் அளித்த மகன்
தனக்கு திருமணம் செய்து வைக்காத பெற்றோர்கள் குறித்து இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இன்னும் திருமணம் ஆகல
சேலம் கன்னங்குறிச்சி காவல் நிலையத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் அளித்த புகார் போலீசாரை அதிரவைத்துள்ளது. 25 வயதான அந்த இளைஞர் நூதன புகாரை ஒன்றை தனது பெற்றோர்கள் மீது கொடுத்துள்ளார்.
அவரின் மனுவை வாங்கி படித்த காவல் நிலைய போலீஸ் ஏட்டுவிற்கு சிறிது நேரத்தில் வியர்த்து போயுள்ளது. அதாவது, அந்த இளைஞன் தனக்கு 25 வயதாகியும் திருமணம் செய்து வைக்காத தனது பெற்றோர்களே மீதே புகார் அளித்துள்ளார்.
புகாரை படித்த போலீசார் இளைஞரின் பெற்றோரை வரவழைத்து பேசியுள்ளனர். அப்போது தான் விவரம் வெளிவந்துள்ளது. பெற்றோர்கள் மகன் மீது சரமாரியான புகாரை வைத்துள்ளனர். 25 வயதாகியும் மகன் தற்போது வரை எந்த வேலைக்கும் செல்லாமலே காலத்தை ஓட்டி வருகின்றார்.
அறிவுரை
வீட்டில் பைக் வாங்கி கொடுத்தால் வேலைக்கு போவதாக உறுதியளித்து, வண்டி வாங்கி கொடுத்ததும் அவர் வேலைக்கு செல்லவில்லை. இப்படி இருக்கும் அவருக்கு எப்படி எப்படி திருமணம் செய்து வைப்பது என்றே தாங்கள் யோசிப்பதாக என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
செய்வதறியாது முழித்த போலீசார், பின்னர் சுதாரித்து கொண்டு இளைஞரிடம், முதலில் வேலைக்கு சென்று சம்பாதியுங்கள் பின்னர் மாப்பிள்ளையாகலாம் என அறிவுரையை கூறி அனுப்பியுள்ளனர். இளைஞர் இப்படி ஒரு புகாரை அளிக்க, இருக்கிற பிரச்சனையில் இது வேற..? என போலீசார் சிறிது நேரம் விழிபிதுங்கி இருந்துள்ளனர்.