திருமண ஆசை காட்டி பாலியல் வன்கொடுமை ...விஜய் அலுவலக கணக்காளர் அதிரடி கைது..!
பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம் பெண் அளித்த புகாரில் விஜய் அலுவலக கணக்காளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழக்கம்
இது குறித்து 26 வயது இளம்பெண் அளித்த புகாரில், சமூக வலைதளம் வாயிலாக, நடிகர் விஜயின் கணக்காளர் என்று நடிகர் விஜயுடன் இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு இருந்த ராஜேஷ் (32) என்பவர் என் தோழி வாயிலாக பழக்கமானார்.
திருமணமானதை மறைத்த ராஜேஷ், என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பல்வேறு காரணங்களை குறிப்பிட்டு 10 லட்சம் ரூபாய் வரை என்னிடம் வாங்கினார். ராஜேஷ் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மறுப்பு - கைது
ஆனால், இது குறித்து ராஜேஷ் கூறும் போது, சென்னை நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் அலுவலகத்தில் கணக்காளராக வேலை பார்த்து வரும் எனக்கு துணை நடிகை ஒருவர் வாயிலாக, அந்த பெண் அறிமுகமானார் என்றும் திருமணமானவன் என சொன்ன போதிலும் அப்பெண் தான் தவறான மெசேஜ்களை அனுப்பினார் என தெரிவித்திருந்தார்.
அந்த ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்ற ராஜேஷ், உண்மையில் அந்த பெண் தான் எனக்கு பாலியல் தொல்லை தந்தார் என்றும் அது குறித்து நானும் புகார் அளித்துள்ளேன் என கூறியிருந்தார். இந்த புகாரில் தற்போது அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையம் ராஜேஷை கைது செய்துள்ளது.