40கிலோ மீட்டர் தாயின் உடலை சுமந்து சென்ற மகன் - திடுக்கிடும் வீடியோ!

Viral Video West Bengal Death
By Sumathi Jan 07, 2023 04:24 AM GMT
Report

தாயின் உடலை மகன் 40கி.மீ சுமந்து சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

இறந்த தாய்

மேற்கு வங்கம் கிராந்தி என்கிற பகுதியைச் சேர்ந்தவர் ராம் பிரசாத். இவர் சுவாசக் கோளாறு நோயினால் பாதிக்கப்பட்ட 72 வயதான தனது தாயை ஜல்பைகுரி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தாய் உயிரிழந்து விட்டார்.

40கிலோ மீட்டர் தாயின் உடலை சுமந்து சென்ற மகன் - திடுக்கிடும் வீடியோ! | Son Carried Mother Body 40 Kilometers West Bengal

அதன்பின் தாயின் உடலை எடுத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் கேட்டுள்ளார். ஆனால் 900 ரூபாய் என்கிற நிர்ணய கட்டத்திற்கு எதிராக 3000 ரூபாய் கேட்டிருக்கிறார்கள். போதிய பணம் இல்லாததால் தாயின் உடலை தோளிலேயே 40 கிலோ மீட்டர் வரை சுமந்து சென்றுள்ளார்.

 சுமந்து சென்ற மகன்

இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. பலரும் அந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கும் மருத்துவமனைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் கல்யாண், இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது.

ஆம்புலன்ஸ் கட்டணம் செலுத்த போதுமான கட்டணம் இல்லை என்று ராம் பிரசாத் கூறி இருந்தால் நாங்களே வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்திருப்போம். அதிக கட்டணம் கேட்ட ஆம்புலன்ஸ் அனைவரும் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறியிருக்கிறார்.