மது அருந்தும்போது இந்த உணவுகளை அவசியம் தவிர்க்கனும் - எதெல்லாம் தெரியுமா?
மது அருந்தும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னவென்று பார்ப்போம்.
மது பழக்கம்
மது அருந்துகையில் பிரெஞ்சு ப்ரைஸ் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதில் அதிக அளவு சோடியம் உள்ளது. கீரை வகைகளையும் சாப்பிடக் கூடாது.
குறிப்பாக அகத்தி கீரையை தவிர்ப்பது நல்லது. அதோடு பதப்படுத்தப்பட்ட மற்றும் கார்ப்ஸ் உணவுகள், இனிப்பு பானங்கள், சிப்ஸ்கள் போன்ற கார்போஹைட்ரேட் உணவுகளை எடுத்துக்கொள்ளவே கூடாது.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
சாக்லேட்டை தவிர்ப்பதும் நல்லது. இதில் உள்ள காஃபின் மற்றும் கோகோ போன்றவை பிற அமில உணவுகளால் தூண்டப்பட்டு இரைப்பை குடல் பிரச்சனையை உண்டாக்கும்.
ஆல்கஹாலுடன் காரமான உணவுகளை எடுத்துக்கொள்வதும் பிரச்னைகளை ஏற்படுத்தும். மேலும், அதிகமாக உப்பு கலந்த உணவுகளை மது அருந்தும்போது எடுத்துக்கொள்ளக் கூடாது.