BP இருக்குறவங்க இதை அவசியம் நோட் பண்ணுங்க - வெங்காயம், பூண்டு சேர்த்து ஒரு சூப்!
ரத்தக் கொதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆரோக்கியமான ரெசிபி ஒன்றை பார்க்கலாம்.
ரத்தக் கொதிப்பு
அதிக ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் முருங்கைக்கீரை தினமும் சாப்பிடலாம். உடலில் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு முருங்கைக்கீரை உதவுகிறது. எனவே, இதனை சாப்பாட்டிலும் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது சூப்பாகவும் குடிக்கலாம்.
ஒரு கைப்பிடி அளவு முருங்கை இலை எடுத்துக் கொண்டு, 2 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வையுங்கள். கொதிக்க ஆரம்பித்ததும், நறுக்கிய சின்ன வெங்காயத் துண்டுகள், வெள்ளைப்பூண்டு, ஒரு ஸ்பூன் மிளகுத் தூள், ஒரு ஸ்பூன் சீரகத் தூள் ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
தேவைக்கு ஏறப் உப்பு போட்டு நன்கு கொதித்ததும், 2 டம்ளராக விட்ட தண்ணீர் சுமார் ஒன்றரை டம்ளர் தண்ணீர் அளவுக்கு வற்றும் வரை காய்ச்ச வேண்டும். பின் முருங்கை இலை சூப்பை அரித்து தனியாக பிரித்து எடுங்கள். தற்போது சத்துகள் அடங்கிய முருங்கைக் கீரை சூப் ரெடியாகி விடும்.
தேவையான பொருட்கள்:
- ஒரு கைப்பிடி அளவுக்கு முருங்கைக் கீரை
- ஒரு ஸ்பூன் மிளகு
- ஒரு ஸ்பூன் சீரகம்
- சின்ன வெங்காயம் - 5
- வெள்ளைப் பூண்டு - 5
- உப்பு - தேவையான அளவு