சோமாலியா நாட்டில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 20 பேர் பலி
people
dead
bomb
Somalia
By Jon
சோமாலியா நாட்டில் நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் 20 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுததியுள்ளது. சோமாலியா தலைநகர் மொகடிசுவில் ஒரு உணவகத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 20 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் 30 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.