சூரிய கிரகணம்; நீண்ட நேரம் பூமி இருள் சூழும் அதிசயம்; இந்தியாவில் பார்க்க முடியுமா?
வானியல் அதிசயம் என்று அழைக்கப்படும் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது.
சூரிய கிரகணம்
சூரிய கிரகணம் என்றால் பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் நிலவு பயணிக்கும்போது இந்த அதிசயம் நிகழ்கிறது. அவ்வாறு நிலவு இரண்டுக்கும் மத்தியில் செல்லும்போது அது சூரிய ஒளியை பூமி மீது விழ விடாமல் மறைத்துக்கொள்ளும். இதனால், பூமியே இருள் சூழ்ந்து காணப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (08.04.2024) நிகழ்கிறது. இதன் காரணமாக உலகமே ருள் சூழ்ந்து பகல் இரவாக மாறும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது சுமார் 185 கிலோ மீட்டர் தூரம் வரை பிரதிபலிக்கும். ஆனால் இந்த அதிசய நிகழ்வை ஒரு சில பகுதிகளில் மட்டுமே காண முடியும் என்று சொல்லப்படுகிறது.
இந்தியாவில்?
அதாவது அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் தென்படும். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள 18 மாநிலங்களிலும் இந்த அரிய நிகழ்வை காண முடியும். ஆனால் இந்தியாவில் இந்த நிகழ்வை காண முடியாது. இந்திய நேரப்படி இரவு 9.12 மணிக்கு தொடங்கி சரியாக 10.08 மணிக்கு முழுமை அடைகிறது.
இந்த நிகழ்வு அடுத்த நாள் காலை 2.22 மணிக்கு நிறைவடையும். இந்த நிகழ்வு நிறைவடைய சுமார் 2.30 மணி நேரம் ஆகும். ஆனால் முழுமை நிகழ்வு கடைசி 4 நிமிடங்களில் நிகழும். நாசாவின் அறிக்கைப்படி சுமார் 4 நிமிடம் 27 நொடிகள் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை வெறும் கண்களில் பார்ப்பது ஆபத்தாகும். எனவே கிரகணத்தை காண்பதற்கு தயாரிக்கப்பட்ட பிரத்யேக கண்ணாடிகளை அணித்துக்கொண்டு காண்பது நல்லது.