இன்று நிகழப்போகும் சூரிய கிரகணம் - இந்தியாவில் தென்படுமா? இதோ தகவல்

By Nandhini Apr 30, 2022 04:40 AM GMT
Report

பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும்போது சூரியனின் ஒளியைத் தடுக்கும். இது நடக்கும்போது மொத்த சூரிய கிரகணம் நிகழ்கிறது.

ஆனால், சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் இருக்கும்போது, ​​அது சிறியதாக தோன்றும். சூரியனின் முழு பார்வையையும் தடுக்காது. கிரகணம் நிகழும் போது சந்திரனைச் சுற்றி நெருப்பு வளையம் போன்று காட்சியளிக்கும். இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நடைபெற உள்ளது.

இந்நிலையில், நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு -

இந்த ஆண்டில் முதலாவது சூரிய கிரகணம் இன்று நடக்க உள்ளது.

இந்த சூரிய கிரகணம் பாதியளவு தெரிய உள்ளது. இந்த கிரகணமானது 4 மணி நேரம் நீடிக்கும்.

இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது.

பிற நாடுகளில் சனிக்கிழமை ஐஎஸ்டி நேர நிலவரப்படி நண்பகல் 12.15 மணி முதல் பிற்பகல் 2.11 மணி வரையிலும் கிரகணம் தெரியும்.

சிலி, அர்ஜெண்டினா, உருகுவே, மேற்கு பாராகுவே, தென்மேற்கு பொலிவியா, தென்கிழக்கு பெரு மற்றும் தென்மேற்கு பிரேசிலில் சிறு பகுதி ஆகிய இடங்களில் சூரிய கிரகணம் தென்பட உள்ளது.

இவ்வாறு தகவல் தெரிவித்துள்ளது.   

இன்று நிகழப்போகும் சூரிய கிரகணம் - இந்தியாவில் தென்படுமா? இதோ தகவல் | Solar Eclipse