100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் சூரிய கிரகணம் - தேதி, நேரம் இதுதான்..
100 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நிகழும் முழு சூரிய கிரகணம் நிகழவுள்ளது.
சூரிய கிரகணம்
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வரும்போது நிகழும் ஒரு வானியல் நிகழ்வு தான் சூரிய கிரகணம். ஆகஸ்ட் 2ஆம் தேதி 2027ஆம் ஆண்டு அன்று ஒரு அரிய சூரிய கிரகணம் நிகழவுள்ளது.
இந்த முழு சூரிய கிரகணமும் கிட்டத்தட்ட ஆறு நிமிடங்கள் வரை வானத்தையும் பூமியின் சில பகுதிகளையும் இருளாக்கும். இது போன்ற கிரகணம் 100 ஆண்டுகளுக்கு பிறகுதான் மீண்டும் நிகழும். இந்த அரிதான சூரிய கிரகணம், பல கண்டங்களில் தெரியும்.
இந்தியாவில் எப்படி?
அது முன்னேறும்போது, இந்தியப் பெருங்கடலில் அது மங்கலாகத் தெரிய தொடங்கும். மேலும் இது போன்ற கிரகணம் 2114ஆம் ஆண்டு வரை மீண்டும் நிகழாது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த சூரியகிரகணம் ஆகஸ்ட் 2ஆம் தேதி 2027ஆம் ஆண்டு திங்கட்கிழமை அதிகாலை முதல் பிற்பகல் வரை முழு சூரிய கிரகணம் நிகழும்.
தெற்கு ஸ்பெயினில், உள்ளூர் நேரப்படி மதியம் 1:30 முதல் 2:00 வரை முழுமை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லிபியா மற்றும் எகிப்து போன்ற வட ஆபிரிக்காவில், கிரகணம் உள்ளூர் நேரப்படி (EET) மதியம் 2:00 முதல் 2:30 வரை உச்சத்தில் இருக்கும்.
சவுதி அரேபியாவில், கிரகணம் சிறிது நேரம் கழித்து, உள்ளூர் நேரப்படி (AST) சுமார் 3:00 மணிக்கு முழுமையடையும். இந்தியாவில் இந்த முழு சூரிய கிரகணம் இருக்காது. பகுதி சூரிய கிரகணமாக இருக்கும்.