இந்த 6 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை - என்ன காரணம்?

Pakistan World Social Media
By Jiyath Jul 06, 2024 11:55 AM GMT
Report

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 6 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

சமூக வலைதளங்கள்

பாகிஸ்தான் நாட்டில் வரும் 17-ம் தேதி மொஹரம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் வரும் 13-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சமூக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த 6 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை - என்ன காரணம்? | Social Media Platforms Banned For 6 Days Pakistan

இந்த நடவடிக்கையானது வன்முறையை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதன்மூலம் வெறுப்பு பேச்சு, தவறான கருத்துகள் மற்றும் தகவல்கள் பகிரப்படுவது தடுக்கப்படும் என்று முதல்வர் மரியம் நவாஸ் தலைமையிலான பஞ்சாப் மாகாண அரசு தெரிவித்துள்ளது.

டீ பாத்திரமாக மாறிய தலைமுடி; அசத்திய சிகையலங்கார கலைஞர் - வைரல் வீடியோ!

டீ பாத்திரமாக மாறிய தலைமுடி; அசத்திய சிகையலங்கார கலைஞர் - வைரல் வீடியோ!

12 கோடி மக்கள்

இந்த மாகாணத்தில் வசித்து வரும் சுமார் 12 கோடி மக்கள் பயன்படுத்தும் யூடியூப், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் உள்ளிட்ட தளங்களை 6 நாட்களுக்கு தடை செய்யப்படவுள்ளது.

இந்த 6 நாட்களுக்கு சமூக வலைத்தளங்களுக்கு தடை - என்ன காரணம்? | Social Media Platforms Banned For 6 Days Pakistan

ஏற்கனவே பாகிஸ்தான் பொதுத்தேர்தலின் போது எக்ஸ் வலைதளத்திற்கு அந்நாட்டு அரசு கடந்த பிப்ரவரி மாதம் முதல் தடை விதித்திருக்கிறது. தேர்தல் முடிவுகளை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.