அனைத்து சமூக வலைத்தளங்களுக்கும் 6 நாட்கள் தடை விதித்த நாடு - என்ன காரணம்!
அனைத்து சமூக வலைதள சேவையும் ஆறு நாட்கள் தடை வித்திக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நாட்கள் தடை
பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாண முதல்வர் மர்யம் நவாஸ் தலைமையிலான அரசு அனைத்து சமூக வலைதள சேவையும் சுமார் ஆறு நாட்களுக்கு தடை செய்யப்படும் என அறிவித்துள்ளது. இது தொடர்பான பரிந்துரையை ஷெபாஸ் ஷெரீப் அரசு, மத்திய அரசிடம் முன்வைத்துள்ளது.
வன்முறையை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என மாகாண அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் வெறுப்பு பேச்சு மற்றும் தவறான கருத்து, தகவல் பகிரப்படுவதை தடுக்கலாம் என அரசு கருதுகிறது. இதனை நேற்றிரவு அரசு தெரிவித்தது.
என்ன காரணம்
சுமார் 120 மில்லியன் மக்கள் இந்த மாகாணத்தில் வசித்து வருகின்றனர். முதல்வர் மர்யம் நவாஸின் கேபினட் குழு, யூடியூப், எக்ஸ், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக் உள்ளிட்ட தளங்களை இதன்போது தடை செய்யப்பட உள்ளது.
கடந்த பிப்ரவரி முதல் பாகிஸ்தான் நாட்டில் எக்ஸ் தளம் தடை செய்யப்பட்டது. அந்நாட்டின் பொது தேர்தலின் போது, தேர்தல் முடிவுகள் சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டில் இந்த தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில், அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர்,
சமூக வலைதளங்களை கடுமையாக விமர்சித்திருந்தார். அது சமூகத்துக்கு தீயது என்றும், டிஜிட்டல் தீவிரவாதத்துக்கு வழிவகை செய்வதாகவும் அவர் சொல்லி இருந்தார். அந்த நாட்டின் துணை பிரதமர் இஷக் தார், சமூக வலைதளங்களுக்கு நாட்டில் நிரந்தர தடை வேண்டுமென தெரிவித்துள்ளார்.