சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் டீப்ஃபேக் ஆபாசங்கள் - சிக்கலில் meta நிறுவனம்!
மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அதிகரிக்கும் டீப்ஃபேக் ஆபாசங்கள்.
டீப்ஃபேக் ஆபாசங்கள்
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் தாய் நிறுவனம் மெட்டா ஆகும். இதன் பெரும்பாலான வருமானம் விளம்பரங்கள் அடிப்படையில் தான் வருகிறது. ஆனால் தற்போது டீப்ஃபேக் போன்ற போலியான விளம்பரங்களுகம், அனுமதி பெறாத பிரபலங்களின் நகலாவும் அதிகம் பரவி வருகிறது.
அதுமட்டுமல்லாமல், 18 வயத்துக்குட்பட்டவராகள் மத்தியில் டீப்ஃபேக் ஆபாசங்கள் அதிகரிப்பது மெட்டாவுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது. அதுபோல ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் மெட்டா நிறுவனமும் விளம்பரங்கள் அடிப்படையில் தான் இயங்கி வருகிறது.
புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டு அதன் விளம்பர வருவாய் 131 பில்லியன் அமெரிக்க டாலராகும்.இது முந்தைய ஆண்டை விடவும் 119 பில்லியன் அதிகமாகும். ஒரு பக்கம் வருவாய் அதிகரித்தாலும் மறுபக்கம் சர்ச்சைகளும் வரத்தான் செய்கிறது.
meta நிறுவனம்
ஏஐ உருவாக்கத்திலான டீப்ஃபேக் உள்ளடக்கம் அடிப்படையிலான விளம்பரங்கள் மெட்டாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தானியங்கி முறையில் விளம்பரச் செயல்முறைகள் இயங்குவதால் ஆபாசம் நிறைந்த விளம்பரங்களை ஏற்றுக்கொள்ள மோசடியாளர்கள் ஏஐ அடிப்படையிலான உபகரணங்களை பயன்படுத்து மெட்டாவை ஏமாற்றுகின்றனர்.
இதன் காரணமாக டீப்ஃபேக் படைப்புகளே நிரம்பி வழிகின்றன. இந்த டீப்ஃபேக் ஆர்வலர்களுக்கு இணையத்தில் ஏராளமான ஆபாச செயலிகள் உள்ளது. இவை வயது வந்தோருக்கான உள்ளடக்கத்திற்கு எதிரான மெட்டாவின் கொள்கைகளை மீறுகின்றன.
மெட்டா நிறுவனம் வயது வந்தோருக்கான உள்ளடக்கம் கொண்ட விளம்பரங்களைத் தடைசெய்வதாகக் கூறுகிறது. மேலும் விதிமீறலான விளம்பரங்களை அகற்றுவதாகவும் உறுதியளிக்கிறது, ஆனால் இந்த விளம்பரங்கள் வயதுவந்தோர் விதிமீறலாக மட்டுமன்றி சட்டச்சிக்கல்களிலும் மெட்டாவை இழுத்துவிடுகின்றன.
இதனையடுத்து, ஆப் ஸ்டோர் மற்றும் ப்ளேஸ்டோரில் நிறைந்திருக்கும் சர்ச்சைக்குரிய செயலிகளை நீக்கும் பணியில் மெட்டா இறங்கியுள்ளது. இதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் ஒத்துழைப்பும் கிடைத்து வருகிறது.