சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த அதிரடி தடை! எங்கு தெரியுமா?

Australia Social Media
By Swetha May 15, 2024 08:06 AM GMT
Report

சமூக ஊடகம் பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகம்

இன்றைய நவீன காலகட்டத்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு நம் அன்றாட வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறிவிட்டது. குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறது.

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த அதிரடி தடை! எங்கு தெரியுமா? | Social Media Ban For Children In Australia

மேலும் சமூக ஊடகங்களிலேயே அவர்கள் மிகுதியான நேரத்தை வீணடிக்கின்றனர். இதனை கருத்திற்கொண்டு முதல்முறையாக தெற்கு ஆஸ்திரேலியா மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடங்கள் பயன்படுத்த தடை விதித்து முதலமைச்சர் பீட்டர் மலினஸ்காஸ் அறிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் மன அழுத்தத்தை உருவாக்கும்; நிஜ வாழ்க்கையை சிதைக்கும் - அதிர்ச்சி தகவல்!

சமூக வலைத்தளங்கள் மன அழுத்தத்தை உருவாக்கும்; நிஜ வாழ்க்கையை சிதைக்கும் - அதிர்ச்சி தகவல்!

அதிரடி தடை

அதன்படி சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த பெற்றோரின் ஒப்புதல் அவசியம் என்று தெரிவித்துள்ளனர். இதற்கான நடைமுறையை ஆராய உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான ஒரு குழுவையும் அரசாங்கம் நியமித்துள்ளது.

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த அதிரடி தடை! எங்கு தெரியுமா? | Social Media Ban For Children In Australia

இது குறித்து பேசிய அவர், ''எங்கள் குழந்தைகள் இப்போது பாதிக்கப்படுகிறார்கள், நேரத்தை வீணடிக்க முடியாது. நான் வேறொருவருக்காகக் காத்திருக்க விரும்பவில்லை, வழிநடத்துவோம். 18 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியர்கள் ஒன்லைன் சூதாட்டத்தை அணுகுவதைத் தடுக்கும் விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றலாம்'' என கூறினார்.இந்த நிலையில், அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.