இனி இவர்கள் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தக்கூடாது - அதிர்ச்சி அறிவிப்பு!
ஆப்பிள் சாதனங்களை அரசு ஊழியர்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள்
ஆப்பிள் ஐபோன் உள்பட ஆப்பிள் நிறுவனங்களின் சாதனங்களை உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்க உளவு நிறுவனங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் போன் மற்றும் இதர சாதனங்களைக் கொண்டு உளவு நடவடிக்கையில் ஈடுபடுவதாக ரஷ்யா ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனம் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
தடை
இதனால், ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் அவர்களின் சொந்த தேவைக்காக ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களை பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு ஆப்பிள் நிறுவனம் ரஷ்யா ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனத்தின் குற்றச்சாட்டை மறுத்ததோடு பயனர்களின் தனி உரிமை பாதுகாப்பதில் தங்கள் நிறுவனம் கவனமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.