முன்னரே சமந்தா குறித்து வெளிப்படையாக பேசிய சோபிதா! என்ன சொன்னார் தெரியுமா?
நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபிதா துலிபாலா இருவரின் நிச்சயதார்த்தம் இன்று நடந்து முடிந்துள்ளது.
நிச்சயதார்த்தம்
இவர்களது காதல் விவகாரம் சஸ்பென்சாகவே வைக்கப்டடிருந்த நிலையில், பல கதைகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருந்தன.
ஆனால், பொதுவெளியில் அறிவிக்காமல் இருந்த சூழலிலும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளிவந்துவிட்டது. இருவருக்கும் முறைப்படி நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்து விட்டது.
இது தொடர்பாக நாகார்ஜூனா பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். பலரும் வாழ்த்துக்களை வாரி வழங்கி வரும் நிலையில், ஒரு புறம் பலரும் சமந்தா என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்ற பார்வையையும் வைத்து வருகிறார்கள்.
சோபிதா கருத்து
ஆனால், அவர் இது குறித்த எந்த ஒரு சலசலப்பும் இன்றி இருக்கிறார். இந்த நிலையில் தான் முன்னதாக பேட்டி ஒன்றில் சோபிதாவிடம் சமந்தா குறித்து வினவப்பட்டிருந்தது.
அதற்கு பதிலளித்தவர், சமந்தாவின் திரைப்பயணம் சூப்பர் கூல் என்று சொல்லலாம். அவர் நடித்த படங்கள், அருமையாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நாக சைதன்யா பற்றி பேசுகையில், அவர் மிகவும் அமைதியானவர், கண்ணியமாக நடந்துகொள்வார். அதை நான் பாராட்டுகிறேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.