சமந்தாவை பழிவாங்கவா இது? நாகா சைதன்யா நிச்சயதார்த்த தேதியில் இப்படி ஒரு பின்னணியா
நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபித்தா நிச்சயதார்த்தம் இன்று நடைபெற்று முடிந்துள்ளது.
நிச்சயம்
நீண்ட நாட்களாகவே நடிகர் நாக சைதன்யா - நடிகை சோபித்தா இருவரும் பழகி வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டே இருந்தன. இது குறித்தான எந்த அதிகாரபூர்வ தகவல் வெளிவராமலே இருந்தது.
இருவரிடமும் இது குறித்து கேட்கப்பட்டது போது, அவர்கள் அது குறித்து பதிலும் அளிக்கவில்லை. இந்த விஷயம் சைலெண்டாக இருந்த நிலையில், திடீரென இன்று நாக சைதன்யா - சோபித்தா இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.
தேதி விஷயம்
இது தொடர்பான புகைப்படங்களும் வெளிவந்து வைரலாகி உள்ளது.twitter ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்றுவிட்டது. இந்த சூழலில் தான், சமந்தா என்ன செய்து கொண்டிருக்கிறார் என பலரும் பார்த்து வருகிறார்கள்?
அப்படி தான் என்ன செய்கிறார் என அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் சென்று பார்த்தால், அவர் இது குறித்து எந்த பேச்சும் இல்லாமலே இருக்கிறார்.
அவரின் இன்ஸ்டா பதிவில், நேற்று முதல் இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் வினேஷ் போகத் சம்பவம் குறித்தே சில பதிவை அவர் இட்டுள்ளார்.
அதே நேரத்தில், இன்று இந்த நிகழ்வு நடைபெறுவதற்கும் ஒரு சூட்சுமம் உள்ளதாம். என்னவென்று விசாரித்தால், சமந்தா ஆகஸ்ட் 8 ஆம் தேதி அன்று தான் நாக சைதன்யாவை பிரபோஸ் செய்திருக்கிறாராம்.