தாஜ்மஹாலுக்கு சவால்; பளிங்கு கற்களால் கட்டப்பட்ட ‘சோமி பாக்’ - எங்கு தெரியுமா?
பளிங்கு கற்களால் கட்டப்பட்ட ‘சோமி பாக்’ திறக்கப்பட்டுள்ளது.
சோமி பாக்
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் போன்று வெள்ளை பளிங்குக்கற்களால் சோமி பாக் என்ற மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
ஆக்ராவில் 102 ஆண்டுகளாக கட்டுப்பட்டு வந்த இந்த கட்டிடம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. தாஜ்மஹால் அமைந்திருக்கும் பகுதியிலிருந்து 12கி.மீ தொலைவில் தயால்பாக் பகுதியில் உள்ளது.
இது இறைவனின் தோட்டம் என்ற பொருள்படும் சோமி பாக் மணிமண்டபம் ராதாசோமி எனும் சமய மார்க்கத்தைத் தோற்றுவித்த தானி சுவாமிஜி மகராஜ் என்பவருக்காக கட்டப்பட்ட கல்லறை மாடம்.
102 ஆண்டுகளாக..
52 கிணறுகளுக்கு மேல் அடித்தளமிட்டு 193 அடி உயரத்தில் ராஜஸ்தான் மக்ரானா பளிங்கு கொண்டு கட்டப்பட்ட மணிமண்டபம் எனக் கூறப்படுகிறது. இங்கு அனுமதி இலவசம் என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
உத்தர பிரதேசம், பஞ்சாப், கர்நாடகா மற்றும் அயல் நாடுகளிலும் ராதாசோமி பற்றாளர்கள் உள்ளனர். இந்த கட்டிடப் பணியில் தலைமுறை தலைமுறையாகப் பலர் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.