இது நினைவிடம் அல்ல...கலைஞரின் தாஜ்மகால் - ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

Rajinikanth M K Stalin M Karunanidhi
By Karthick Feb 27, 2024 02:55 AM GMT
Report

 சென்னை மெரினா கடற்கரையில், புதுப்பிக்கப்பட்ட அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

ரஜினிகாந்த் பங்கேற்பு

மறைந்த திமுகவின் முன்னாள் தலைவர்களும், முன்னாள் முதலமைச்சர்களுமான அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடங்கள், சுமார் 8.57 ஏக்கர் நிலப்பரப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

rajinikanth-about-kalaignar-ninaividam

இந்த நினைவிடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு அமைச்சர்கள், திமுக சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்,

இது என்னோட பழக்கம்..."யோகி காலில் விழுந்த சம்பவம்...பதிலளித்த ரஜினி

இது என்னோட பழக்கம்..."யோகி காலில் விழுந்த சம்பவம்...பதிலளித்த ரஜினி

கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வைகோ, திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் மற்றும் கி.வீரமணி ஆகியோருடன் சிறப்பு அழைப்பாளர்களாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

கலைஞரின் தாஜ்மகால்

முதலமைச்சரின் அருகில் அமர்ந்திருந்த நடிகர் ரஜினிகாந்த் முன்னாள் முதல்வர் கலைஞர் குறித்தான குறும்பட தொகுப்பையும் கண்டுக்களித்தார்.

rajinikanth-about-kalaignar-ninaividam

நிகழ்ச்சி கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, "இது கலைஞரின் நினைவிடம் என்று கூறுவதை விட கலைஞரின் தாஜ்மஹால் என்று கூறலாம் என்று பூரிப்புடன் கூறினார்.