இது என்னோட பழக்கம்..."யோகி காலில் விழுந்த சம்பவம்...பதிலளித்த ரஜினி
உபி முதல்வர் யோகி ஆதித்யானத்தின் காலில் விழுந்தது ஏன்? என்பதற்கு நடிகர் ரஜினி பதிலளித்து சென்றுள்ளார்.
யோகி காலில் விழுந்த சம்பவம்
நடிகர் ரஜினியின் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஜெயிலர் படம் மிக பெரிய வெற்றியை எட்டியதை கடந்து சில நாட்களாகவே ரஜினி உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றது பெரிய அளவில் வைரலானது.
பலரும் இது குறித்து கடுமையான விமர்சனங்களை வைத்து வரும் நிலையில், இது குறித்து ரஜினி எந்த பதிலும் கூறாமலே இருந்தார். தனது இமயமலை பயணத்தை முடித்து கொண்டு சென்னை திரும்பிய அவரிடம் இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு ரஜினி பதிலளித்துள்ளார்.
ரஜினி பதில்
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு தமிழ்நாடு மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டு, வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிரூத் உள்ளிட்டோருக்கு நன்றி என்றார்.
யோகி ஆதித்யநாத் சம்பவம் குறித்து பதிலளித்த அவர், நட்பு ரீதியாக மட்டுமே உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டு, 4 ஆண்டுகளுக்கு பிறகு இமயமலைக்கு சென்று வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது கூறி சென்றார்.