பனியில் உறைந்த அமெரிக்கா; 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஆபத்து - 60பேர் பலி!

United States of America Canada Death
By Sumathi Dec 27, 2022 07:00 AM GMT
Report

அமெரிக்கா மற்றும் கனடாவில் சுமார் 25கோடி பேர் பனிப்பொழிவின் காரணமாக தவித்து வருகின்றனர்.

பனிப்புயல்

கடந்த 50 ஆண்டுகளில் இதுதான் மிகவும் மோசமான கிறிஸ்துமஸ் கால குளிர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மாகாணங்களுக்கு தீவிர வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பனியில் உறைந்த அமெரிக்கா; 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஆபத்து - 60பேர் பலி! | Snow Storm Wreaks Havoc In America

டெக்சாஸ் முதல் க்விபெக் வரையில் சுமார் 3,200 கி.மீ. வரையிலும் பனிப்புயல் வீசுகிறது. நியூயார்க்கின் பப்பேலா பகுதியில் பனி கட்டிகளுக்கு அடியில் ஏராளமான பிணங்கள் புதைந்து கிடந்தன. அவற்றை மீட்பு குழுவினர் மீட்டனர்.

பனிபுயலில் சிக்கி இதுவரை பொதுமக்கள், பெண்கள் உள்பட 60 பேர் பலியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், 15 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.