விவாகரத்து வதந்தி: அல்டிமேட்டா பதிலடி கொடுத்த சினேகா!

Prasanna Sneha Gossip Today Divorce
By Sumathi Nov 14, 2022 05:30 PM GMT
Report

விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக ஒரு செயலை செய்துள்ளார் சினேகா.

 சினேகா-பிரசன்னா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவர் 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகனும், ஆதியந்தா என்ற மகளும் உள்ளனர்.

விவாகரத்து வதந்தி: அல்டிமேட்டா பதிலடி கொடுத்த சினேகா! | Sneha Prasanna Bold Reply To Divorce Rumors

தொடர்ந்து நட்சத்திர ஜோடிகளாக் வலம் வந்த வண்ணம் உள்ளனர். இருவருமே தங்களது சமூக வலைதளங்களில் குடும்பத்துடன் இருக்கும் மகிழ்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருவார்கள்.

விவாகரத்து?

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் வதந்திகள் பரவி வந்தது.

விவாகரத்து வதந்தி: அல்டிமேட்டா பதிலடி கொடுத்த சினேகா! | Sneha Prasanna Bold Reply To Divorce Rumors

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் நடிகை சினேகா தனது இன்ஸ்டா பக்கத்தில் பிரசன்னாவுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஹாப்பி வீக் எண்ட் என பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தற்போதுதான் விவாகரத்து என்பது வதந்தி என ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.