கமல் ஹீரோவா.. லிப்லாக் இருக்குமே; பதறிய நடிகை சினேகா - போட்ட கண்டிஷன்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நடிப்பதற்கு சினேகா அச்சப்பட்ட சம்பவம் தெரியவந்துள்ளது.
நடிகை சினேகா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவர் 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகனும், ஆதியந்தா என்ற மகளும் உள்ளனர்.
முன்னதாக, சினேகாவின் கரியரில் வசூல் ராஜா எம்பிபிஎஸ் படம் முக்கியமான ஒன்று. அந்தப் படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்ததால் பெரிதும் கவனம் ஈர்க்கப்பட்டார். இந்நிலையில், பத்திரிக்கையாளர் பிஸ்மி,
லிப்லாக் அச்சம்
வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்துக்கான பேச்சுவார்த்தையை சரண் சினேகாவிடம் நடத்தினார். அப்போது ஹீரோ யார் என்று சினேகா கேட்க கமல் ஹாசன் என்று சொல்லியிருக்கிறார் சரண். உடனே சினேகா பதறி என்னால் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார். கமல் படம் என்றாலே லிப் லாக் இருக்கும்.
இந்தப் படத்தில் நான் லிப் லாக் செய்யமாட்டேன். இந்த கண்டிஷனுக்கு ஒத்துக்கொண்டால் நான் இதில் நடிக்கிறேன் என கூறியிருக்கிறார். சரணும் அதற்கு ஒத்துக்கொண்டார். அதன்பின், சினேகா அந்த படத்தில் நடித்தார் எனத் தெரிவித்துள்ளார்.