Tuesday, Jul 22, 2025

கொத்த சீறிப் பாய்ந்த பாம்பிடமிருந்து மகனை காப்பாற்றிய தாய் - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

Viral Video Snake
By Nandhini 3 years ago
Report

கொத்த சீறிப் பாய்ந்த பாம்பிடமிருந்து சட்டென மகனின் உயிரை காப்பாற்றிய தாயின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மகனை காப்பாற்றிய தாய்

அந்த வீடியோவில், வீட்டு வாசல் படிக்கட்டில் மிக நீள நல்ல பாம்பு ஒன்று படுத்துக் கிடந்தது. அப்போது, மகனும், தாயும் வெளியே செல்வதற்காக வந்தனர். சிறுவன் படிக்கட்டில் இறங்கியபோது பாம்பு இருப்பதை கவனிக்கவில்லை.

snake - viral video

சிறுவன் அந்தப் பாம்பை மிதித்து சென்றான். தாயும் கவனிக்காமல் படிக்கட்டில் கீழே இறங்கினார். திடீரென பின்னால் இருந்த நல்ல பாம்பு சீறிப் பாய்ந்து சிறுவனை கடிக்க வந்தது. சட்டென்று கண் இமைக்கும் நேரத்தில் பாம்பின் பிடியில் சிக்காமல் மகனை காப்பாற்றினார் தாய்.

தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் சற்றே அதிர்ச்சி அடைந்து, மகனை காப்பாற்றிய தாயின் செயலை பாராட்டி வருகின்றனர்.