பார்ட்டியில் பாம்பு விஷ போதை - விற்பனை செய்த 'பிக் பாஸ்' பிரபலம் கைது!

Youtube Bigg Boss Drugs
By Swetha Mar 18, 2024 08:14 AM GMT
Report

பார்ட்டி'-யில் பாம்பு விஷ போதை பொருளை பிக் பாஸ் பிரபலம் ஒருவர் ஏற்பாடு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாம்பு விஷ போதை

ரேவ் பார்ட்டியில் பங்கேற்பவர்கள் பலர் சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாட்டு குற்றச்சாட்டில் சிக்குகிறார்கள். குறிப்பாக பாம்பு விஷ போதையை பயன்படுத்துவது மற்றும் பாம்பு விஷத்துக்கு அடிமையாவது போன்ற போதைப்பொருள் துஷ்பிரயோகம் அந்த பார்ட்டியில் நிகழ்கிறது.

பார்ட்டியில் பாம்பு விஷ போதை - விற்பனை செய்த

பாம்பு விஷம் மிகவும் ஆபத்தானது. இதை ஒருமுறைபல பயன்படுத்தினால் பல நாட்களுக்கு நீடிக்கும். மேலும், நீண்ட காலம் எடுத்துக்கொண்டால் உடல் மற்றும் உளவியல் ரீதியாக பாதிப்படைய செய்து உயிரை பறிக்கும் தன்மை கொண்டது. இந்தியாவில் இது பொதுவாக நடைமுறையில் இல்லை.

செலவில்லாமல் ரூ. 22 லட்சத்திற்கு பெட்ரோல் நிரப்பிய பெண்; சின்ன ட்ரிக் தான்! எப்படி தெரியுமா?

செலவில்லாமல் ரூ. 22 லட்சத்திற்கு பெட்ரோல் நிரப்பிய பெண்; சின்ன ட்ரிக் தான்! எப்படி தெரியுமா?

திடுக்கிடும் சம்பவம்

இந்நிலையில், பிரபல யூடியூபரும், பிக் பாஸ் ஓடிடி 2 வெற்றியாளருமான எல்விஷ் யாதவ் (26), கடந்த ஆண்டு நொய்டாவில் நடைபெற்ற 'ரேவ் பார்ட்டி'-யில், பாம்பு விஷ போதைப் பொருளை ஏற்பாடு செய்து தந்ததாக புகார் எழுந்தது.

பார்ட்டியில் பாம்பு விஷ போதை - விற்பனை செய்த

இதனையடுத்து, அந்த பார்ட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் பாம்பு விஷம் இருப்பதை தடயவியல் அறிக்கைகள் ஏற்கெனவே உறுதி செய்திருந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக எல்விஷ் யாதவை விசாரிக்க நொய்டா போலீஸார் சம்மன் அனுப்பினர்.

அதன்படி, நேற்று விசாரணைக்கு ஆஜரான எல்விஷ் யாதவை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

பார்ட்டியில் பாம்பு விஷ போதை - விற்பனை செய்த

மேலும், எல்விஷ் யாதவிடம் அவற்றை தந்தது யார் என போலீஸார் விசாரித்தத்தில், பாலிவுட் பாடகர் பாசில்புரியா அதனை ஏற்பாடு செய்து தந்ததாக அவர் கூறியுள்ளார். எனவே, அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.