ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டதால் உயிரிழப்பு; 8 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம் - என்ன காரணம்?
8 வயது சிறுவன் ஒருவன் ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ட்ராபெர்ரி
அமெரிக்காவில் உள்ள மேடிசன்வில்லி என்ற நகரில் நார்த் ஹாப்கின்ஸ் என்னும் பள்ளி உள்ளது. அங்கு, கடந்த சில வாரங்களுக்கு முன் நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
அதில், கலந்துகொண்ட 8 வயது சிறுவன் பல ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிட்டுள்ளான், சாப்பிட்ட சில நிமிடங்களில் அந்த சிறுவனுக்கு அரிப்பு போன்ற அலர்ஜி ஏற்பட்டுள்ளது.
இதனை கட்டுப்படுத்த முயற்சித்த அவரது பெற்றோர்கள் அவருக்கு Benadryl என்ற மருந்தை கொடுத்து, அவனை குளிப்பாட்டியதாக தெரிவித்தனர். இருப்பினும், உடல்நிலை மோசமானதை தொடர்ந்து அச்சிறுவனை அருகில் இருந்த மருத்துமனையில் அனுமதித்துள்ளனர்.
என்ன காரணம்?
அச்சிறுவன் சிக்கிசை பெற்று வீடு திரும்பிய மறுநாள் பேச்சுமூச்சின்றி இருந்ததை கவனித்த பெற்றோருக்கு அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்
இதையடுத்து, சிறுவனின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு "ஸ்ட்ராபெர்ரி அலர்ஜி" இருந்திருப்பதாக தெரிவித்தனர்.
மேலும், மருத்துவத்துறை வெளியிட்ட செய்தி அறிக்கையில்,"தற்போது பொது மருத்துவத்துறை கென்டக்கியின் உள்ள ஸ்ட்ராபெர்ரிகளை பரிசோதித்து வருகின்றன. இது தற்செயலான சம்பவம் என்றாலும் முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக யாரும் தற்போதைக்கு ஸ்ட்ராபெர்ரிகளை உண்ண வேண்டாம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.