விடுதியில் மதவழிப்பாடு செய்த வெளிநாட்டு மாணவர்கள்; கற்களை வீசி தாக்குதல் - பரபரப்பு சம்பவம்!
மதவழிப்பாடு செய்த வெளிநாட்டு மாணவர்கள் மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதவழிப்பாடு
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு உள்ள விடுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட இலங்கை, ஆப்கானிஸ்தான், கஜகஸ்தான், ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்த பல மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய மாணவர்கள் சிலர் விடுதி வளாகத்தில் இரவில் மதவழிபாடு செய்துகொண்டிருந்தனர் .
அந்த வளாகத்தில் இருந்த ஒரு சுவற்றில் அரபிய மொழியில் எழுதி அதன் அருகே வழிபாடு செய்துள்ளனர்.
தாக்குதல்
அப்போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த உள்ளூர் மர்ம கும்பல், இங்கு தொழுகை நடத்தக்கூடாது என கூறி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
மேலும், இரு தரப்பிறகும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவர் மேல் ஒருவர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த மோதலில் இரண்டு வெளிநாட்டு மாணவர்களும் படுகாயம் அடைந்தனர். மாணவர்களின் உடைமைகள், வாகனங்கள் என்று அனைத்தையும் சேதப்படுத்தினர்.
இது குறித்து தகவலறிந்து
விரைந்து வந்த போலீசார், இந்த சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இதுவரை இரண்டு பேரை கைது செய்து உள்ளனர்.