நண்பரின் மகளுக்கு பாலியல் வண்கொடுமை - இந்திய கடலோர காவல் படையினர் செய்த கொடூரம்!
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இந்திய கடலோர காவல்படையினர் இரண்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் வண்கொடுமை
மகாராஷ்டிரா மாநிலம், வடக்கு மும்பையின் புறநகர்ப் பகுதியில் கடலோர காவல்படையினர் குடும்பத்தினர் வசிக்கும் குடியிருப்பு உள்ளது.
சக ஊழியர்கள் என்பதால் குடும்ப ரீதியாகவும் இவர்களிடம் நல்ல இணக்கம் இருந்துள்ளது. கடந்த மாதம் ஓரு படைவீரர் தனது இரவுப் பணிகாக சென்றிருந்த நிலையில், அவரது 10-ம் வகுப்பு பயிலும் 15 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
அந்த வீட்டின் குடும்பத்தினரும் சுப நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டனர். அப்போது அவர்களது வீட்டின் அருகே வசிக்கும் 30 வயது மற்றொரு படைவீரர் வந்து, அச்சிறுமியை அவரது மனைவி அழைப்பதாக கூறி அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கொடூரச் செயல்
அங்கு சென்றதும் அந்த நபர் வீட்டின் கதவை பூட்டிவிட்டார். அங்கு ஏற்கெனவே தயாராக இருந்த 23 வயது படைவீரரும் சேர்ந்து இருவரும் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
தொடர்ந்து, இந்த சம்பவத்தை பற்றி வெளியில் சொன்னால் சிறுமியையும், அவரது தந்தையையும் கொலை செய்துவிடுவோம் என கூறி மிரட்டியுள்ளனர்.
அண்மையில் அச்சிறுமிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது குடும்பத்திடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை மும்பை போலீஸல் மற்றும் துறை ரீதியாகவும் கடலோர காவல் படையில் புகார் அளித்தார்.
இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு ‘376 டிஏ' மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ், கூட்டு பலாத்காரம் செய்ததாக இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்ட இருவரும் கைது செய்துள்ளனர்.

இன்று இரவு முதல் இடியுடன் கூடிய கனமழை : வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை IBC Tamil

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
